This page contains the educational resource support projects across the 2023 calendar.
Following our book publishing ceremony on 12.02.2023, we began distributing our Paari self-study GCE O-Level books. With the help of our Paari Foundation team, we are able to aid many children in their GCE O-level education by providing them with our self-study book. The book distribution has had a massive outreach with over 4000 books being given to over 200 schools across various educational zones. As of 20/04/2023, we are proud to announce we have successfully finished our Paari Self Study book distribution.
Paari International Outreach -United Kingdom
St. Helen's Independent school students in Great Britain performed a fundraising project for the development of Northern province students on 2nd December 2023. They raised £158 (60,000 rupees) which was donated to Paari foundation to support their education Social work. We express our heartfelt thanks for the school and to all the students who participated in the program.
பிரித்தானியாவில் உயர் கல்லூரியில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் வடக்கு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நிதி சேகரிக்கும் கல்விசார் செயற்பாடுகளில் கடந்த டிசம்பர் மாதம் ஈடுபட்டனர். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற 60,000.00 ரூபாவினை பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் செயற்பாடுகளுக்கு வழங்கவுள்ளனர். குறித்த உயரிய கல்விக்கான சமூகப்பணி செயற்றிட்டத்தில் பங்காற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Paari outreach - 17, 18 and 19
A Grand Seminar for 2023 GCE O/Level Students -Thunukai Educational Zone
Every achievement is fuelled by resilience!
No one can cease your success if your thoughts and actions are united!
On 03.05.2023 we held seminars at three different places for the students sitting their G.C.E Ordinary level examination in 2023, under the Thunukai Educational Zone. Mr. Samuel Pratheevananth, Deputy Education Officer of Tunukai and Principal (Secretary - Paari Foundation) of V/Pavatkulam Kanisra High School, Mr. S. Jananthan participated in the said events.
1) M/Ottusuttan Mahavithiyalayam -150 students participated and benefited.
In this Seminar the subject of English was presented by Mr. C. Thiruvarutselvan (V/Nelukulam Kalaimalum Vidyalaya) and the subject of History was presented by Mr. A. Vinod (V/Paavkulam Kanisra High School).
2) M/Palinagar Mahavithiyalam- 213 students participated and benefited.
In this seminar, the subject of English was presented by Mr. A. Gokulan Assistant Principal SLPS-III (Y/Sandilipai Hindu College) and History was presented by Mr Na Prakas (Ya/Analaitheevu Sathasivam Mahavidyalayam).
3) Mankulam Mahavithiyalayam -100 students participated and benefited
In this seminar, the subject of English was presented by Mr. A. Gokulan Assistant Principal SLPS-III (Y/Sandilipai Hindu College) and History was presented by Mr. Na Prakas (Ya/Analaitheevu Sathasivam Mahavidyalayam).
We express our heartfelt thanks to all who helped organise this event and participated.
ஒவ்வொரு சாதனையும் முயற்சி என்ற ஒற்றைச் செயலிலேயே தொடங்குகின்றது! எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் உங்கள் வெற்றியைத் தடைசெய்ய யாருமில்லை! 03.05.2023ம் திகதி துணுக்காய் கல்வி வலையத்திற்குட்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள் மாணவர்களுக்கான மாபெரும் கருத்தரங்குகள் மும்முனைகளில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுகளில் துணுக்காய் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.சாமுவேல் பிரதீவானந் மற்றும் வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் (செயலாளர் - பாரி அறக்கட்டளை) திரு.செ.ஐனந்தன் அவர்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
1) மு/ ஒட்டுசுட்டான் மாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 150 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
குறித்த கருத்தரங்கில் ஆங்கிலத் துறை வளவாளராக திரு.சி.திருவருட்செல்வன் மற்றும் (வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) வரலாற்றுத் துறை வளவாளராக திரு.அ.வினோத் (வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2) மு/பாலிநகர் மாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 213 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
குறித்த கருத்தரங்கில் ஆங்கிலத் துறை வளவாளராக திரு.அ.கோகுலன் உதவி அதிபர் SLPS-III (யா/சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி) அவர்களும் மற்றும் வரலாற்றுத் துறை வளவாளராக திரு.நா.பிரகாஸ் ( யா/அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயம் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
3) மு/மாங்குளம் மாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 100 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
குறித்த கருத்தரங்கில் ஆங்கிலத் துறை வளவாளராக திரு.அ.கோகுலன் உதவி அதிபர் SLPS-III (யா/சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி) அவர்களும் மற்றும் வரலாற்றுத் துறை வளவாளராக திரு.நா.பிரகாஸ் ( யா/அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயம் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
M/Ottusuttan Mahavithiyalayam

Describe your image

Describe your image

Describe your image

Describe your image
M/Palinagar Mahavithiyalam

Describe your image

Describe your image

Describe your image

Describe your image
M/Mankulam Mahavithiyalam

Describe your image

Describe your image

Describe your image

Describe your image
Paari outreach - 16
Paari Exercise Books Distribution -Mullaitheevu Educational Zone
On 18th and 19th April 2023, as per the advise of Our Paari Foundation secretary Mr. S. Jananthan (SLPS-3) Principal of V/Pavatharkulam Kanisra Higher Secondary Vidyalayam, 50 students who are going to sit the 2023 G.C.E. Ordinary Level Examination have been donated 'Paari Self-study GCE O/L Q & A books' worth of Rs.50,400 from following Vavuniya South Education Zone schools:
01. V/Veerapuram Manivasakar Mahavidyalayam
02. V/Kidachuri Karuveppankulam Government Tamil Mixed School
03. V/Adaikala Annai Mahavidyalayam
We would like to express our heartfelt thanks to all those who worked with our secretary on the occasion.
கடந்த 2023 .04.18ம்,19ம் திகதிகளில் எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் செயலாளர் திரு.செ.ஐனந்தன்( SLPS -3) அதிபர் வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட
வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம்,
வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,
வ/அடைக்கல அன்னை வித்தியாலயம்(இலுப்பைக்குளம்)
ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 50 மாணவர்களுக்கு ரூபா ஜம்பது ஆயிரத்து நானூறு ரூபா 50,400 பெறுமதியான "பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் நிகழ்வில் எமது செயலாளருடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Describe your image

Describe your image

Describe your image

Describe your image
Paari outreach - 15
Paari Exercise Books Distribution -Mullaitheevu Educational Zone
We have printed two thousand (2000) Exercise books with the financial contribution of five hundred and twelve thousand rupees (512,000) of Mr. Seevaratnam Jeevananth (who lives in London) to distribute for the students who are interested in education but living in less privileged families. On 15.04.2023 as start of this event one thousand (1000) Exrecise books were distributed to 200 selected students from the following schools in Mullaitheevu district
01. M/Theravil Tamil Vidyalayam
02. M/Mullivaikal Government Tamil Mixed School
03. M/Arumugathan Kulam Tamil Mixed School
04. M/Karunatukerni Government Tamil Mixed School
We would also like to express our gratitude to the principals, teachers, parents and students of the schools who have cooperated to organize the event in the best possible way and who worked with us on the long journey/ Development Officer of Manippai Hindu College (National School). We express our heartfelt thanks to Mr. M. Mathusan and to the donor Mr. S. Jeevananth who has given high financial contribution.
பாரியின் அடங்காப்பற்று!..
புலம்பெயர் தேசத்தில் (லண்டன்) வசித்து வருபவரான திரு.சீவரட்ணம் ஜீவானந் அவர்களின் ஐந்து இலட்சத்து பன்னிரெண்டு ஆயிரம் ரூபா (512,000) உயரிய நிதிப்பங்களிப்புடன் இரண்டாயிரம்(2000) அப்பியாசக் கொப்பிகளை அச்சிட்டு பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களில் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு ஆயிரம்(1000) அப்பியாசக் கொப்பிகள் இன்றைய தினம் 15.04.2023 வழங்கி வைக்கப்பட்டன.
01. மு/தேராவில் தமிழ் வித்தியாலயம்.
02. மு/ முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.
03. மு/ ஆறுமுகத்தான் குளம் தமிழ் கலவன் பாடசாலை.
04. மு/கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை.
குறித்த நிகழ்வினை சிறந்த முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நீண்ட பயணத்தில் என்னோடு இணைந்து பணியாற்றிய யா/ மானிப்பாய் இந்துக்கல்லூரியின்(தேசிய பாடசாலை) அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ம.மதுசன் அவர்களுக்கும் உயரிய நிதிப்பங்களிப்பினை வழங்கிய நன்கொடையாளர் திரு. சீ. ஜீவானந் அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Paari outreach - 14
Paari touched the peak -Hill country of central province
PAARI touched the peak... Kurinji
A dream come true at the moment!
On 06.04.2023 The founder of our Paari Foundation Late Mr. Nadarajah Vimalaranjithan's dream was fullfilled the educational needs of those children studying in the central province of Hill country schools. In order to fulfill his dream 250 students from 6 selected schools from Kandy and Nuwaraeliya districts were given Paari self study GCE O/L books worth three hundred and eleven thousand rupees (311,000) at the Kandy Hindu National College. Principal of that school Mr. C. Chandramohan and other school principals, teachers and students were attended the event. We would like to express our heartfelt thanks to Mr. M. Gopishkhanna, the teacher of Manipay Hindu College, and to Mr. R. Raviraj, Project director of Paari Foundation, who organized the event in a best way.
சிகரம் தொட்ட பாரி...
கனவு நினைவாகும் தருணம்!
குறிஞ்சியில் நிலையாகும் பாரி
கடந்த 06.04.2023 திகதி எமது பாரி அறக்கட்டளையின் நிறுவுநர் அமரர். திரு. நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் கனவு பாரி கல்விக்கான சமூகப்பணி அமையம் மலையகச் செல்வங்களின் கல்வித் தேவையை நிறைவேற்றுவதில் பங்காற்ற வேண்டும் என்பதாகும்.
அவரின் கனவை நிறைவேற்றும் பொருட்டு மலையக சிறுவர்களின் கல்விக்காக கண்டி- நுவரேலியா மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு மூன்று இலட்சத்து பதினோராயிரம் ரூபா (311,000) பெறுமதியான பாரி சுயகற்றல் ஏடுகள் கண்டி இந்து தேசிய கல்லாரியில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் அதிபர் சி.சந்திரமோகன் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். குறித்த நிகழ்வினை சிறந்த முறையில் ஒழுங்கமைத்துத்தந்த யா/ மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு.ம.கோபிஷ்கண்ணா அவர்களுக்கும் எமது அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர் ர.ரவிராஜ் அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Paari outreach - 13
Theevaham Educational zone
On 05.04.2023 According to the request of the Regional Education Director of Theevagam, Paari self study G.C.E O/L Books worth of three hundred and twenty four thousand (324,000) rupees have been provided to the selected 300 G.C.E O/L students from Karainagar to Neduntheevu. The starting event was held at Urgavathurai Senmaris College.
We also express our heartfelt thanks to the Regional Director of Education and Deputy Director of Education for their cooperation and permission to conduct this event in the best possible manner.
தீவகம் வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக காரைநகர் முதல் நெடுந்தீவு வரையான தெரிவு செய்யப்பட்ட 300 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மூன்று இலட்சத்து இருபத்து நான்காயிரம் (324,000) ரூபா பெறுமதியிலான பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு 05.04.2023 ஊர்காவற்றுறை சென்மேரிஸ் கல்லூரியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வினை சிறந்த முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்புக்களையும் அனுமதியையும் வழங்கிய வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Describe your image

Describe your image

Describe your image

Describe your image
Paari outreach - 12
Vavuniya South Educational zone
On 04.2023 as per the advise of Our Paari Foundation secretary Mr. S. Jananthan (SLPS-3) Principal of V/Pavatharkulam Kanisra Higher Secondary Vidyalayam, 50 students from V/ Sri Lanka Catholic Tamil Kalavan School, 50 stuents from V/ Komarasan Kulam Maha Vidyalayam, 50 students from V/ Neddulam Kalaimalu Vidyalaya, and 50 students from V/ Chidambarapuram Srinagaraja Vidyalayam, who are going to sit the 2023 G.C.E. Ordinary Level Examination in Vavuniya South Education Zone have been awarded 'Paari Self-study GCE O/L Q & A books' worth of Rs.151,200/- .
We would also like to express our heartfelt thanks to all those who worked with our Secretary.
கடந்த 04.04.2023 திகதி எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் செயலாளர் திரு.செ.ஐனந்தன்( SLPS -3) அதிபர்
வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வ/இலங்கை கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, வ/கோமரசன் குளம் மகாவித்தியாலயம், வ/நெடுக்குளம் கலைமகள் வித்தியாலயம், மற்றும் வ/ சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 150 மாணவர்களுக்கு ரூபா ஒரு இலட்சத்து ஜம்பத்து ஒராயிரத்து இருநூறு ரூபா 151,200 பெறுமதியான
"பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் நிகழ்வில் எமது செயலாளருடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
Paari outreach - 11
Vadamaradchi Educational Zone
From Polykandy to the kattaikadu
On 27.03.2023 as per the request of the Director of Vadamaradchi Educational Zone, 300 selected students from Polikandy to Kattaikadu who are going to sit for the GCE Ordinary Level Examination in 2023, have been provided with PAARI Self-Study Books worth of Rs. 324,000. Vadamarachi District Director of Education Mr. Kanagasabai Sathyapalan Deputy Education Officer (Educational Development) Mrs. Rathika Nirmalan and Assistant Secretary Mr. Veluchami Gajendran participated as special guests on behalf of Paari Foundation.
Mr. V. Gajendran, who is working with great care in the educational development of his district students, is directly visiting the schools and distributing the books to the students.
ஆர்ப்பரிக்கும் பொலிகண்டி முதல் கட்டைக்காடு வரை
வடமராச்சி வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக பொலிகண்டி முதல் கட்டைக்காடு வரையான தெரிவு செய்யப்பட்ட 300 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மூன்று இலட்சத்து இருபத்து நான்காயிரம் (324,000) ரூபா பெறுமதியிலான பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வடமராச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கனகசபை சத்தியபாலன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.ராதிகா நிர்மலன் மற்றும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் சார்பாக உளவளத்துணையாளர் திரு.வேலுச்சாமி கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றுக் கொண்டனர்.
தமது பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் பணியாற்றி வரும் திரு. வே.கஜேந்திரன் அவர்கள் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று ஏடுகளை மாணவர்களுக்கு வழங்கிவைத்தமைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() |
Paari outreach - 10
Kilinochchi South Educational Zone
On 23.03.2023 as per the request of the Director of Education, Kilinochchi South Zone, 300 selected students from Mukkomban to Oottupulam who are going to to sit their G.C.E O/L examination this year have been provided with G.C.E O/L self-study books
worth Rs. 324,000.
Mr. R. Raviraj, Project Director of Paari Foundation, College Principals, Teachers and students participated in the event. We express our heartfelt thanks to to all those who contributed to this event.
கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக முக்கொம்பன் முதல் ஊற்றுப்புலம் வரையான தெரிவு செய்யப்பட்ட 300 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மூன்று இலட்சத்து இருபத்து நான்காயிரம் (324,000) ரூபா பெறுமதியிலான பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர் திரு.ர.ரவிராஜ் , கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
Paari outreach - 09
Mullaitheevu/Thunukai Educational Zone
On 23.03.2023 the distribution of G.C.E O/L self-study books (worth four hundred and thirty two thousand (432,000) rupees) to 400 students who are going to sit their G.C.E O/L examination this year . The event was well organised by the Tunukai Zone Education Officer and Deputy Education Officer (Educational Development). This startling event was organised at Mankulam Maha Vidyalayam in the presence of Mullaitheevu District Additional Governor Mr. E. Kanakeswaran, Tunukai Zone Education Officer Mrs. Malathi Mukundan, Deputy Education Officer (Educational Development) Mr. Samuel Pratheevananth, higher educational officers and Project Director of Paari Foundation Mr. R. Raviraj. We express our heartfelt thanks to all those who contributed to the event.
துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ஆகியோரின் சிறந்த ஒழுங்கமைப்புடன் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 400 மாணவர்களுக்கு நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ( 432,000) ரூபா பெறுமதியான பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு மாங்குளம் மகா வித்தியாலத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.கனகேஸ்வரன் துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் , பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.சாமுவேல் பிரதீவானந், கல்விசார் உயர் அதிகாரிகள் மற்றும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப் பணி அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர் திரு.ர.ரவிராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() | ![]() |
Paari outreach - 07
Southern province
On 21/03/2023 75 students selected from five different schools in Maruthamunai and Periyaneelavani areas under the Kalmunai Zonal Education Office, who are going to sit the G.CE Ordinary Level Examination to be held in May 2023, have been given Paari Self-study GCE O/L Q & A books.
Due to during the day students were sit on end of term of examination books were presented to the relevant school principals . We would like to express our heartfelt thanks to Mr. M.H. Ubaidullah Chief Lecturer of National Institute of Social Development and his son Ubaidullah Omar Sayyaf who participated and made this as special event and took responsibility on carrying the books from Jaffana to south.
கடந்த 21.03.2023 திகதி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மருதமுனை , பெரியநீலாவணைப் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த 2023 மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 75 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஸ்ர விரிவுரையாளர் Mr.M.H.Ubaidullah மற்றும் அவரது புத்திரன் Ubaidullah Omar Sayyaf ஆகியோர் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
குறித்த நிகழ்வின் போது மாணவர்களுக்கு பரீட்சை இடம் பெற்றமையால் கல்லூரிகளின் முதல்வர்களிடம் ஏடுகளை வழங்கி வைத்தனர். யாழ்பாணத்தில் இருந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு ஏடுகளை எடுத்துச் சென்று மாணவர்களுக்கு வழங்கிய தங்களது உயரிய கல்விக்கான சமூகப் பணிக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() |
Paari outreach - 06
Valigamam Educational zone -Manipay Hindu College
On 09.03.2023, 70 students of Jaffna/Manipay Hindu College (National School) who are going to sit their GCE Ordinary level Examination for the year 2023 were presented with Paari Self-study GCE O/L Q & A books worth of Rs.70,000 by our Paari Foundation.
We would like to express our heartfelt thanks to Mr. V. Thayalan, teacher of Manipay Hindu College and Mr. M. Mathusan, Development Officer, for working with us on this occasion.
கடந்த 09.03.2023 திகதி, எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யா/ மானிப்பாய் இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை) 70 மாணவர்களுக்கு எழுபதாயிரம் ரூபா (70,000 ) பெறுமதியான "பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் எம்முடன் எம்முடன் இணைந்து பணியாற்றிய மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் வ.தயாளன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.மதுசன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.




Paari outreach - 05
Vavuniya South Educational zone
On 09.03.2023 as per the advice of our Paari foundation Secretary and Principal of V/Pavatharkulam Kanisra Higher Secondary Vidyalayam, Mr. S. Jananthan (SLPS-3), 50 students from V/Saivaprakasa Mahila Vidyalaya and 50 students from V/Poovarasankulam Maha Vidyalayam who are going to sit the 2023 G.C.E. Ordinary Level Examination in Vavuniya South Education Zone have been awarded 'Paari Self-study GCE O/L Q & A books' worth of Rs.100,000/- .
We would also like to express our heartfelt thanks to all those who worked with our Secretary and also our special thanks to Parents of the students who were also present at this event.
கடந்த 09.03.2023 திகதி எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் செயலாளர் திரு.செ.ஐனந்தன்( SLPS -3) அதிபர் வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வ/சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும் மற்றும் வ/பூவரசன்குளம் வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும் ரூபா ஒரு இலட்சம் 100,000 பெறுமதியான "பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாணவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். மேலும் நிகழ்வில் எமது செயலாளருடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() |
Paari outreach -04
Mannar/Madhu educational zone
On 05.03.2023 as per the request of the Mannar/Madhu Zonal Education's Director, 380 students who are going to sit the GCE Ordinary Level Examination for the year 2023 were presented with Paari Self-study GCE O/L Q & A books worth of Rs. 380,000. We would like to express our heartfelt gratitude to Teacher, Manipay Hindu College, Mr. V. Thayalan, and Development Officer Mr. M. Mathusan who were worked with us on this occasion.
கடந்த 05.03.2023 திகதி, எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் மன்னார்/மடு வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 380 மாணவர்களுக்கு ரூபா 380,000 பெறுமதியான "பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் எம்முடன் இணைந்து பணியாற்றிய மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் வ.தயாளன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.மதுசன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.




Paari outreach -03
Mullaitheevu Educational zone
On 21.02.2023 as per the request of the Mullaitivu Zonal Education's Director, 527 students who are going to sit the GCE Ordinary Level Examination for the year 2023 were presented with Paari Self-study GCE O/L Q & A books worth Rs. 527,000. We would also like to express our heartfelt gratitude to Mr. A. Sujindran, Teacher, Manipay Hindu College, who worked with us on this occasion.
21.01.2023, எமது பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 527 மாணவர்களுக்கு ரூபா 527,000 பெறுமதியான "பாரி சுயகற்றல்" ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் எம்முடன் இணைந்து செயற்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் திரு.அ.சுஜிந்திரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |