Another part of Paari outreach is providing educational facilities to enable all students to have equal acess to facilities that provide support in their studies. Below are the current projects of 2023.
Paari outreach - 20
We carried out an evaluation work with the aim of setting up a "drinking water project" for Moovender Preschool located in the middle of Mallavi Yogapuram as per the request of Thunukai District Education Director. Based on this we have undertaken the following programs.
* Construction of a new well due to lack of well facility.
* Bringing water to the tank from the well located at a distance of 140 feet.
* Providing water pipe facilities according to pre-school students.
27.09.2023 An inauguration event for the supply of drinking water tor the Moovender Preschool has been opened by the Thunukai District Education Deputy Director Mr. Samuel Prathivanan. Mr. & Mrs. Vijayalakshmi Sanmuganathan from the Netherlands gave the financial contribution of four hundred and ten thousand and four hundred rupees (Rs 410,400.00) for this project. We express our heartfelt gratitude to Mr. & Mrs. Vijayalakshmi Sanmuganathan. Also, we would like to express our gratitude to Mr. C. Ravindran (Ravi) living in the Netherlands and UC Johnson and Suji who gave their valuable advise and contribution to carry out the project successfully.
துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களது கோரிக்கைக்கமைவாக மல்லாவி யோகபுரம் மத்தியில் அமைந்திருக்கும் மூவேந்தர் முன்பள்ளிக்கு "குடிநீர் திட்டம்" ஒன்றினை அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் மதிப்பீட்டு பணியினை மேற்கொண்டிருந்தோம். இதனடிப்படையில் பின்வரும் வேலைத்திட்டங்களை மேற்கொன்றோம்.
* கிணற்று வசதி இன்மையால் புதிய கிணறு ஒன்றினை அமைத்துக் கொள்ளுதல்.
* 140 அடி தொலைவில் அமைக்கப்படும் கிணற்றிலிருந்து நீர்த்தாங்கிக்கு நீரினைக் கொண்டு வருதல்.
* முன்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப குடிநீர்க் குழாய் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் கடந்த 27.09.2023ம் திகதி புதன்கிழமை யோகபுரம் மத்தி மூவேந்தர் முன்பள்ளிக்கான குடிநீர் விநியோகத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. குறித்த திட்டத்தினை துணுக்காய் வலயக்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர்
திரு.சாமுவேல் பிரதிவாணந் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
குறித்த கருத்திட்டத்திற்காக நான்கு இலட்சத்து பத்தாயிரத்து நானூறு (410,400.00) ரூபா உயரிய நிதிப்பங்களிப்பினை வழங்கிய நெதர்லாந்து தேசத்து திரு.திருமதி. சண்முகநாதன் விஐயலட்சுமி அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் குறித்த கருத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைகளை வழங்கிய நெதர்லாந்து தேசத்தில் வாழ்ந்துவரும் திரு.சி.இரவிந்திரன்(ரவி) அவர்களுக்கும் UC ஜான்சன், சுஜி ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |
Paari outreach - 08
Mini Library Opening at M/ Karunatukerni American Tamil Mixed School
On 22.03.2023 as per the request of the Deputy Director of Education, Mullaitheevu, a "Mini Library" has been opened by Paari Foundation at M/ Karunatukerni American Tamil Mixed School. The "Mini- Library" consists of educational books for Year 1-5 students, that were requested by the school themselves. The library was been funded with the financial contribution of one lakh rupees (100,000) by Mr and Mrs. Kamalaranjithan and Kalaranjini, who reside in Switzerland.
முல்லைத்தீவு பிரதிக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக மு/ கருநாட்டுக் கேணி அ.த.க பாடசாலையில் " நூலகப் பெட்டகம்" பாரி அறக்கட்டளையினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நூலகப் பெட்டகமானது சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு. திருமதி கமலரஞ்சிதன் கலாரஞ்சினி அவர்களது ஒரு இலட்சம் (100,000 ) ரூபா உயரிய நிதிப்பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() | ![]() |