As part of our Paari Outreach we have held several familial support projects this year. We believe by supporting the families of underprivileged children we can elevate the living conditions for them and open doors to future opportunities.
Paari outreach - 22
Familial Support
A three-month tailoring training has been provided for 8 women selected from some women lead families from Mullaitheevu district, with the aim of supporting their children's education. This project was completed with the high funding (Rs 260,000.00) of a Canadian donor in memory of his father Late Mr. Ayathurai Sinnathamby. Certificates for those who completed the tailoring training has been presented at the event on 31.10.2023 under the leadership of Mullaitheevu District Secretariat, Mullaitheevu District at 9.30 am.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் கனடா தேசத்து ஆலோசகர் சி.கருணாகரன் அவர்களது ஐந்து இலட்சம் (260,000.00) ரூபா உயரிய நிதிப்பங்களிப்புடன் அவரது தந்தை அமரர் ஐயாத்துரை சின்னத்தம்பி ஞபகார்த்தமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்டப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த எட்டுப் பெண்களுக்கு நான்கு மாதங்கள் தையல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது. குறித்த பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது கடந்த 31.10.2023ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திரு.பு.ரமணன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.கனேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.அ.சுஜீந்திரன் அவர்களும் பாரி அறக்கட்டளை அமையத்தின் ஆவணமாக்கல் பணியாளர் UC ஜான்சன் அவர்களும் கலந்து கொண்டனர். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Paari outreach - 21
Familial Support
On 12.10.2023 a Livelihood Program for familial support has been implemented. A regular donor of Paari Foundation, Mr. Sinnathambi Ravindran (Netherlands) in memory of his wife late Mrs. Ravindran Jayaranjana made his contribution ( Rs. 204, 776) for this project. This outreach project helped to improve the quality of living conditions for Mrs. Jayamala Sivanesan and her family who lives in Pudukudiripu Koppavil village area . The money was used to construct a cowshed and adopt a cow, providing the family with a way of earning an income that would be used to support the needs of their 3 children's education. Paari foundation takes pride in providing opportunities for family to establish a good quality of life through familial support.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் 12.10.2023 கல்விக்கான வாழ்வாதார செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அமையத்தின் நன்கொடையாளர் திரு. சின்னத்தம்பி ரவீந்திரன் (நெதர்லாந்து) அவர்கள் தனது மனைவி அமரர் திருமதி ரவீந்திரன் ஜெயரஞ்சனா அவர்களது ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு கோப்பாவில் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் திருமதி. சிவநேசன் ஜெயமாலா என்பவருக்கு புதிய மாட்டு கொட்டகை ஒன்றினை அமைத்து பசு ஒன்றினையும் வாழ்வாதார மேம்பாட்டுடன் பெற்றுக் கொடுத்துள்ளார்.
குறித்த திட்டத்தின் பயனாளியின் கணவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் வேளை அவர்களது மூன்று பிள்ளைகளினதும் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு குறித்த கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு இலட்சத்து நான்காயிரத்து எழுநூற்று எழுபத்தாறு ரூபா ( 204, 776 .00) உயரிய நிதிப்பங்களிப்பு வழங்கிய நன்கொடையாளருக்கும் எமது அமையத்தின் தன்னார்வப் பணியாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




Paari outreach - 02
Familial Support
On 08.02.2023 we launched a 100-day "Tailoring Training Course" under the project "Women Empowerment Programme for Education - 2023" by our Paari Foundation. For this project, 6 women from Puthukkudiyiruppu divisional secretary's division and 1 woman from Kilinochchi divisional secretary's division have been selected. The project has been launched with the suggestions of Mr. Sinnathambi Karunakaran, the Canadian advisor and donor of our Foundation with a high funding contribution of Rs. 150,000. We would like to express our heartfelt gratitude to him and the officers of Puthukkudiyiruppu divisional secretariat.
08.02.2023, எமது பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் " கல்விக்கான பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2023 " எனும் கருத்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் கொண்டமைந்த "தையல்ப் பயிற்சி நெறியினை ஆரம்பித்து வைத்துள்ளோம். குறித்த நிகழ்வின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் இருந்து 06 பெண்களும் கிளிநொச்சி பிரதேச செயலர் பிரிவிலிருந்து ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த கருத்திட்டமானது எமது அமையத்தின் கனடா தேசத்து ஆலோசகரான சின்னத்தம்பி கருணாகரன் என்பவரது ஆலோசனைகள் மற்றும் 150,000 ரூபா பெறுமதியான உயரிய நிதிப்பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




Paari outreach - 01
Familial Support
On 12.01.2023, based on the identification and request of Mr. Sinnathambi Karunakaran, the advisor and donor of our Paari Foundation, with the aim of improving the education of children by encouraging self-employment, the value of one hundred and sixty thousand rupees (160,000/=) 100 chairs have been donated a beneficiary at Uduvil Divisional Secretariat.
The event was presided over by the Assistant Divisional Secretary of the Divisional Secretariat, Uduvil. The Child Rights Promotion Officer, Divisional Child Protection Officer and Mr. A. Sujindran, a Teacher at Manipay Hindu College, were also present on the occasion. We would like to express our gratitude to the donor who contributed the highest financial contribution and to all those who cooperated.
12.01.2023, எமது பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் ஆலோசகரும் நன்கொடையாளருமாகிய திரு.சின்னத்தம்பி கருணாகரன் அவர்களது அடையாளப்படுத்தல் மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் சுயதொழில் ஊக்குவிப்பு மூலம் பொருளாதார நிலைமையினை வலுவூட்டுவதன் மூலம் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்ச்சத்து அறுபது ஆயிரம் ரூபா பெறுமதியான (160,000/=) 100 கதிரைகள், உடுவில் பிரதேச செயலகத்தில் பயனாளி ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது உடுவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தலைமையில் இடம் பெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் திரு.அ.சுஜிந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். உயரிய நிதிப்பங்களிப்பினை வழங்கிய நன்கொடையாளருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


