top of page

Paari outreach

Providing wheelchairs

A project was implemented to provide wheelchairs for students with a disability in order to aid their education and day to day activities. With thanks to The Rotary Club of Whitby, an organisation from Canada, who provided us with the generous funding for this project to be completed. In total we were able to provide 14 wheelchairs.

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு முச்சக்கர நாற்காலிகள் வழங்கும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழ்வகம் இல்லத்திலிருந்து கல்வியைத் தொடர்ந்து வரும் மாணவர்களின் பயன்பாட்டிற்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/கனகபுரம் மகாவித்தியாலய மாணவி ஒருவரின் பயன்பாட்டிற்கும் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கருத்திட்டத்திற்காக Canada தேசத்தில் இருந்து Rotary Club of Whitby எனும் அமைப்பு 689,000‌.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். 15 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ‌.

468051973_550862217750602_1128480879434636397_n
468095044_550861957750628_4024066746240318718_n
467780427_550862064417284_4635732116395894549_n
469430251_560450600125097_3622535437347477693_n
469319333_560450383458452_3229123165274534803_n
468948957_560450746791749_5907352484569302438_n
468215172_550145227822301_8974833598259351640_n

Paari outreach

Chairs and Fans supply -M/Karipatta Murippu school

பாரியின் வீச்சு...

மு/கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடடுகளை மேம்படுத்தும் நோக்கில் 320,000.00 பெறுமதி மிக்க பௌதீகவள மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்  27.10.2024 திகதி பூர்த்தி செய்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நன்கொடையாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

WhatsApp Image 2024-10-27 at 18.28.35
WhatsApp Image 2024-10-27 at 18.28.36
WhatsApp Image 2024-10-27 at 18.28.48
WhatsApp Image 2024-10-27 at 18.28.42
WhatsApp Image 2024-10-27 at 18.28.34
WhatsApp Image 2024-10-27 at 18.28.29
WhatsApp Image 2024-10-27 at 18.28.44

Paari outreach

Drinking water supply

பாரியின் வீச்சு...

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம்

திருமதி சண்முகநாதன் விஜயலட்சுமி தம்பதியரின் உயரிய நிதிப் பங்களிப்புடன்

மு/கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் குடிநீர் விநியோக திட்டத்தினை பூர்த்தி செய்திருந்தோம். குறித்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 2024.06.10ம் திகதி நடைபெற்றது. குறித்த நிகழ்வில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

With generous financial contribution from Mrs. Shanmuganathan Vijayalakshmi we have completed the drinking water supply project in Mu/Karipatta Muruppu Tamil Kalavan School . The inauguration ceremony of the project was held on 10.06.2024. Mrs. Malathi Mukundan, Education Director of Tunukai Zone participated in the said event.

 

449361168_447697838067041_8101349269819166307_n
449174475_447697738067051_5467209773455690548_n
448879422_447698208067004_408979775418212936_n
448995645_447698241400334_7103237567496448876_n
448881113_447698424733649_2960107056713730307_n
449207750_447698491400309_6348047226524105383_n
449215457_447698448066980_7636306160330106701_n

Paari outreach

Mini library opening

பாரியின் வீச்சு...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை

விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் அமரர் நாகராசா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இரண்டாவது ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு மு/சண்முரட்ணம் வித்தியாலயத்தில் "நூலகப் பெட்டகம்" 2024.06.10ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கருத்திட்ட மானது நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திரு.திருமதி மதிவண்ணன் கஜீபா அவர்களின் 110,000.00 ரூபா உயரிய நிதிப் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன், மற்றும் கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி பத்மசொரூபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்கொடையாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

​In memory of Late Mr Nagarasa Krishnamurthy's second year death anniversary a "Mini  Library " was opened on 10.06.2024 at M/Shanmuratnam Vidyalaya. The project was started with a financial contribution of 110,000.00 rupees from Mr and Mrs. Madhivannan Ghajeeba, who lives in the Netherlands. Tunukai Zone Director of Education Ms. Malathi Mukunthan and Director of Educational Development Ms. Padmasorubhan participated in the said event. We express our heartfelt thanks to all donors and supporters.

 

448271515_439014568935368_37497047357615485_n
441910535_439015112268647_2183879531099149481_n
441923099_439015045601987_3401916431346355097_n
448102191_439014622268696_4558190444923290325_n
448238078_439015248935300_7594979513504555222_n
448237579_439015322268626_6986173647874881455_n

Paari outreach

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற குடும்பங்களில் வாழ்ந்து வரும் நிலையில் கல்வியில் ஆர்வமுடைய யா/பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி மற்றும் யா/ வட்டு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று வரும் மாணவன் ஒருவருக்கு ஒருவருட காலத்திற்கு மாதாந்த ஊக்குவிப்பு தொகையாக 3000 ரூபா வினையும் பிறிதொரு மாணவனுக்கு 47000ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றினையும் கடந்த 2024.06.08ம் திகதி North Carolinians for peace என்னும் அமைப்பின் எண்பத்தேழாயிரத்து நூற்று ஐந்து ரூபாய் அறுபத்தொரு சதம்(87105.61) நிதிப் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைப்பின் இணைப்பாளர் ஆசிரியர் திரு.கோ.சுதாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாக ரத்துக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

With the support of North Carolinians for peace charity and the fund of 87105.61 rupees, we supported two students from Ya/Pandatharipu Hindu College and Ya/Vatu Hindu College who are interested in education but are living in economically weaker families. We provided one student with 3000 rupees monthly to fund their further education for a year and the other student was given a bicycle worth 47000 rupees to aid them in travelling to and from school.  

Mr. Ko Sudhakaran, Associate Professor of the organization participated in the said event and we would like to thank the association for their cooperation and heartfelt donation. 

 

448269799_438927002277458_31511248919624
441911224_438926962277462_25799173198249

Paari outreach

The world cannot survive without water!

Setting up a drinking water project -Moolai American Mission Tamil Kalavan School

We carried out an evaluation work with the aim of setting up a "drinking water project"as per  the request of the school community and  the school principal of Moolai American Mission Tamil Kalavan School. Based on this we will undertake the following programs.

* Construction of a new well due to lack of well facility.

* Bringing water to the tank .

* Providing water pipes facility.

Mr. Shanmuganathan Tharshan from the Netherlands  gave the financial contribution  for solving the long-standing drinking water problem in the school . First phase of work has been started on 27 April 2024. Next phase of tasks will be completed soon and open for the use.  We extend our heartfelt thanks to our Netherland co-ordinator Mr. Sinnathamby Ravindran to organise this project.

மூளாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக,

பாரி அறக்கட்டளையின் நெதர்லாந்து தேசத்து சிரேஸ்ர ஆலோசகர் சின்னத்தம்பி இரவீந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்தில் வசித்து வரும் திரு.சண்முகநாதன் தர்ஷன் அவர்களது உயரிய நிதிப் பங்களிப்புடன் குறித்த பாடசாயில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குடி நீர் விநியோகத் திட்டம் ஒன்றினை அமைத்து கொடுக்கும் நோக்குடன் 2024.04.27ம் திகதி இன்றைய தினம் குழாய்க் கிணறு அமைக்கும் பணி இடம்பெற்றது. அடுத்த கட்டப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படும்.

நன்கொடையாளர், ஆலோசகர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

bottom of page