Providing Educational Facilities
Tube Well Project
Pure drinking water is essential to a healthy life!
At the request of the Zonal Director of Education, a clean drinking water supply project was initiated and inaugurated on 30.04.2026 at Man/Maruthamadu Government Tamil Mixed School. This project aimed to provide a lasting solution to the drinking water issue faced by students and teachers for over 8 years. The total cost of the project was LKR 554,800.00. The event was graced by the Divisional Education Director of Musali and Paari Team.
We extend our heartfelt gratitude to the NCPF organization for their generous financial contribution, which made the successful implementation of this project possible.
பாரியின் வீச்சு !...
மணல் சார்ந்த பிரதேசங்களில் குழாய்க் கிணறு அமைக்கும் பணி என்பது மிகுந்த சிரமமாகும். மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மன்னார் மருதமடு பகுதியில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமானது!.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்/மருதமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 08 வருடங்களுக்கு மேலாக எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் 554,800.00 ரூபாய் செலவில் குடிநீர் விநியோகத்திட்டம் கடந்த 30.04.2026ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முசலி கோட்டக் கல்வி பணிப்பாளர் மற்றும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் சிரேஸ்ர ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய NCPF அமையத்தினருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




Tube Well Project
True generosity is recognising and responding to the needs of those in deep distress—even before they ask. Such is what we call the benevolence of Paari.
At the request of the Zonal Director of Education in Madhu, a project was undertaken to provide a permanent solution to the drinking water problem faced for over 10 years by the students and teachers of M/Periya Murippu Government Tamil Mixed School. Accordingly, a drinking water supply system along with a water purification unit was inaugurated on 30.04.2026 at a total cost of LKR 454,800.00. The event was graced by the Divisional Education Director of Madhu and Paari Foundation’s Team.
We extend our heartfelt gratitude to the NCPF organisation for their generous financial contribution, which made the successful implementation of this project possible.
இடுப்பாடை நழுவுகின்ற போது கைகள் இயல்பாக வந்ததனைப் பிடித்தல் போன்றே!
படுந்துயரில் இருப்பவர்கள் கேட்கா முன்பே! பார்வையிலே அறிந்தளித்தல் பாரியின் ஈகை என்போம்!
மடு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ம/பெரிய முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேலாக எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் 454,800.00 ரூபாய் செலவில் குடிநீர் விநியோகத்திட்டம் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் என்பன கடந்த 30.04.2026ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மடு கோட்டக் கல்வி பணிப்பாளர் மற்றும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் சிரேஸ்ர ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய NCPF அமையத்தினருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




Smart Classroom Inaguration
Mullai land is truly a noble land!
In response to a request made by the Divisional Secretary of Puthukkudiyiruppu, a Smart Television Classroom was ceremonially inaugurated on 04.03.2026 under the Paari E-learning scheme. This initiative was carried out with the aim of facilitating and improving the learning activities of the students of Mu/ Venaavil Sri Murugananda Vidyalayam.
This project was successfully implemented with the approval of the Divisional Secretary of Puthukkudiyiruppu, and stands as a result of the tireless efforts of the school principal, Mr. P. Suresh.
The Smart Television Classroom was handed over with a generous financial contribution of LKR 242,100.00. I would like to express my heartfelt gratitude to Mr. and Mrs. Manish Shah and their family for their valuable support.
The event was graced by the presence of the Founder of Paari Foundation, Mrs. Sasivathana Vimalaranjithan, and the Divisional Secretary of Puthukkudiyiruppu, Mr. R. Vijayakumar, who attended as chief guest.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி...
முல்லை மண் மகத்தான மண்!. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மு/ வேணாவில் ஸ்ரீ முருகானந்த வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் பாரி E- கல்வி செயற்றிட்ட தத்தின் கீழ் திறன் தொலைக்காட்சி வகுப்பறையானது கடந்த 04.03.2026ஆம் திகதியன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் P.சுரேஸ் அவர்களின் விடா முயற்சியின் பயனாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களின் அனுமதியுடன் குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
திறன் தொலைக்காட்சி வகுப்பறையானது 242,100.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்புடன் கையளிப்பு செய்யப்பட்டது. குறித்த நிதியுதவி வழங்கிய Mr& Mrs Manish Shah குடும்பத்தினருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறித்த நிகழ்வில் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் R .விஜயகுமார் அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.




Smart Classroom Inaguration
The Reach of Pari!..
True charity is seeking out what is needed and providing it to those in need.
In memory of the late Nadaraja Vimalaranjithan, founder of the Paari Foundation Educational Social Service, a new smart classroom was inaugurated on 04.03.2026 to expand E-learning opportunities for the students of Mu/Manna Kandal A.T.M. School. This initiative was made possible through a generous financial contribution of Rs. 469,000.00 by his wife, Mrs. Vimalaranjithan Sasivathana.
This classroom holds special significance as the first smart classroom established at the school.
The project was successfully implemented in response to the request made by the school principal and the Puthukkudiyiruppu Divisional Secretary, Mr. R. Vijayakumar.
There is no doubt that this smart classroom will help satisfy the thirst for knowledge of the students who continue their education at this school despite coming from economically disadvantaged families.
Mrs. Vimalaranjithan Sasivathana, founder of the Paari Foundation graced the event with her presence.
தேடிய பொருளைத் தேவையுள்ளோர்க்கு தேடிக் கொடுத்தலே ஈகை!.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுநர் அமரர் நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பாரியார் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அம்மையார் அவர்களின் 469,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்புடன் மு/மன்னா கண்டல் அ.த.க பாடசாலை மாணவர்களின் E- கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய திறன் வகுப்பறை ஒன்று கடந்த 04.03.2026 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட முதலாவது திறன் வகுப்பறையாக இது சிறப்பிடம் பெறுகிறது. பாடசாலை அதிபர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் R.விஜயகுமார் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களில் இருந்து குறித்த பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்து வரும் மாணவர்களின் அறிவுப் பசியைப் போக்கும் வகையில் குறித்த திறன் வகுப்பறை மேலாண்மை பெறும் என்பதில் ஐயமில்லை.
குறித்த நிகழ்வில் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அம்மையார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.




Smart Classroom Inaguration
E – learning - The Path to Education…
In response to a request made by the Principal of P/Sri Puravahini Tamil Vidyalayam, Mr. V. Jeyaratnam, and with the approval of the Bandarawala Zonal Director of Education, a Smart Television Classroom was ceremonially inaugurated on 28.02.2026 as a pilot initiative to promote E-learning among the students of the school.
The event was held under the leadership of the school principal. The chief guests included the Deputy Director of Education (Educational Development) of the Bandarawela Zonal Education Office, Mr. K. Yogeswaran, the Founder of the Paari Foundation’s Social Service Centre for Education, Mrs. Sasivathana Vimalaranjithan, and the Project Director, Mr. Ravinathan Raviraj, along with other distinguished figures in the field of education.
A special highlight of the event was the students’ cultural performances, organised under the guidance of Principal V. Jeyaratnam, which showcased the traditional cultural heritage of the hill-country community.
During the event, the “Paari Vettrikkani-2 ” was also launched for students preparing for the scholarship examination.
I would like to express my heartfelt gratitude to all the donors and educational social workers who extended their support and cooperation in making this initiative a success.
பாரியின் வீச்சு!..
E - கல்விக்கான பாதை...
ப/ஸ்ரீ பூரவாஹினி தமிழ் வித்தியாலய அதிபர் திரு.V.ஜெயரட்ணம் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் அனுமதியுடன் குறித்த பாடசாலை மாணவர்களின் E - கல்விக்கான முன்னோடிச் செயற்றிட்ட மாக திறன் தொலைக்காட்சி வகுப்பறையானது கடந்த 28.02.2026ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற அதேவேளை பிரதம அதிதிகளாக பண்டாரவளை வலயக் கல்விப் பணிமனையின் பிரதித் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.க.யோகேஸ்வரன் அவர்களும் பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அவர்களும் மற்றும் கருத்திட்டப் பணிப்பாளர் திரு ரவிநாதன் ரவிராஜ் அவர்களும் ஏனைய கல்வி சார் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் V.ஜெயரட்ணம் அவர்களின் நெறிப்படுத்தலில் மலையக மக்களின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களை பறைசாற்றும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாரி வெற்றிக்கனி-2 துவித பிரவாக வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்கள் மற்றும் கல்விக்கான சமூகப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




School Equipment donation
To enhance the education of 52 children from the Sri Lanka Association for the Visually Impaired, a special community service initiative was carried out by the Paari Foundation on 23.02.2026.
During this programme, school bags, footwear, and essential learning materials were distributed to the students.
The event was successfully held at the auditorium of the Faculty of Graduate Studies, Jaffna College.
This initiative was implemented successfully with a generous financial contribution of LKR 366,000.00. The contribution was made by the NCPF organisation, for which we would like to express our heartfelt gratitude to the NCPF members for their valuable support, as well as to all the social service volunteers who collaborated in making this educational initiative a success.
பாரியின் வீச்சு!..
இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிறுவனத்தின் உறுப்பினர்களின் 52 பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் கடந்த 2026.02.23ஆம் திகதி புத்தகப்பைகள், பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த செயற்றிட்டம் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டப் படிப்புக்கள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த செயற்றிட்டமானது 366,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. குறித்த நிதிப் பங்களிப்பினை NCPF அமைப்பினர் வழங்கி வைத்தனர். அவர்களுக்கும் இணைந்து பணியாற்றிய அனைத்துக் கல்விக்கான சமூகப் பணியாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




Smart Classroom Inaguration
"A mother’s love lives on in every act of kindness she taught, every value she passed on, and every heart she touched."
As per the request of the Mannar Zonal Education Director, a Smart TV was opened over to the students of Man/Uyilangulam RCTMS School under the "Paari e-Learning" program on the, 12th of January 2026, with the aim of enhancing their learning experience. The Zonal Education Director attended the event as the Chief Guest and graciously inaugurated the classroom.
This project was successfully implemented with a generous financial contribution of Rs. 153,100.00, made in loving memory of the late Mrs. Gnanaranjithamalar Selvaratnam, a devoted mother and grandmother whose love and care continue to inspire. We extend our heartfelt gratitude to Miss. Cani Vimalaranjithan for her generous support and to all the staff who worked together to make this project possible.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக மன்/உயிலங்குளம் RCTMS பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு " பாரி -e learning " நிகழ்சித் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் 12.01.2026ஆம் திகதி Smart TV ஒன்று கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அமரர் திருமதி செல்வரட்ணம் ஞானரஞ்சிதமலர் அவர்களின் ஞாபகார்த்தமாக 153,100.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்புடன் வெற்றிகரமாக குறித்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய செல்வி. விமலரஞ்சிதன் கனி அவர்களுக்கும் இணைந்து பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.




