top of page

Familial Support

As part of our Paari Outreach we are organising several familial support projects every year.  We believe by supporting the families of underprivileged children we can elevate the living conditions for them and open doors to future opportunities.  

1. Providing Tailoring machine
 
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்!

உலக மகளிர் தினம் -2025.03.08 பாரி.

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப் பணி அமையமானது கடந்த 2023ம் ஆண்டு "கல்விக்கான பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 01" எனும் கருத்திட்டத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களின் கோரிக்கைக்கமைவாக மூன்று மாத கால தையல் பயிற்சியினை முற்றிலும் இலவசமாக வழங்கியிருந்தோம். பயிற்சி நெறியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து கொண்ட மாணவிகளுக்கு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பிரிவில் சான்றிதழ் பெற்றுக் கொண்ட கணடாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பயனாளி ஒருவருக்கு அவரது மூன்று பிள்ளைகளினதும் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு அவரது சுயதொழிலை மேம்படுத்தும் நோக்குடன் 2025.03.08ம் திகதி நேற்றைய தினம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் பெறுமதியான ( 146,400.00 ) தையல் இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இங்கிலாந்து தேசத்தில் வசித்து வரும் MS.Sasijenani Selvaratnam அவர்கள் 150,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளார்.அவருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

A woman is a priceless treasure, valued by both heaven and earth!

On International Women's Day, March 8, 2025, Paari Foundation, celebrated the success of its "Women Empowerment Program for Education - 01," which began in 2023. This initiative was carried out at the request of the Pudukkudiyiruppu Divisional Secretary and provided free, three-month tailoring training to women in the community. Those who completed the program received a certificate from the Ministry of Industrial Development.

As part of the program's continued support, one of the beneficiaries from the Kanadawala Divisional Secretariat Division, who earned a certificate in tailoring, was presented with a sewing machine worth Rs. 146,400 on International Women's Day. This sewing machine will help her support her three children and improve her self-employment opportunities. A special thank you goes to Ms. Sasijenani Selvaratnam, a generous donor from England, who contributed Rs. 150,000 to make this project a success. 

2. Bicycle donation
 
பாரியின் வீச்சு...

விசேட தேவையுடைய மாணவியின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு அவரது தாயாரின் சுயதொழிலை மேம்படுத்தும் நோக்குடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அவர்களின் கோரிக்கைக்கமைவாக 2025.02.17ம் திகதியன்று பி.ப 2மணியளவில் நிர்வாக உத்தியோகத்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது 45,500.00 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பு வழங்கிய நன்கொடையாளருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

A bicycle worth Rs. 45,500 was donated to the mother of a student with special needs to support her family’s situation on February 17, 2025, at 2:00 PM, under the chairmanship of the Administrative Officer. This donation, made at the request of the Chandilippai Divisional Secretary. 

The donation was made to assist in improving the family’s mobility, making it easier for the mother to manage daily tasks and responsibilities while also helping with transportation for the student. This gesture is aimed at easing the challenges they face, enabling better access to educational opportunities for the student and improving the mother's ability to support the family through self-employment. The donation is a step toward empowering the family, enhancing their quality of life, and fostering a more inclusive environment for the student’s education. We extend our heartfelt gratitude to the generous donor who provided the financial contribution that made this project a success.

bottom of page