Familial Support
As part of our Paari Outreach we are organising several familial support projects every year. We believe by supporting the families of underprivileged children we can elevate the living conditions for them and open doors to future opportunities.
A Humanitarian Initiative...
In response to a request from the Vaddukoddai Divisional Hospital Patients’ Welfare Society and the Medical Officer, 25 mattresses valued at LKR 177,500.00 were donated on 26 June 2026 to support the provision of 24-hour healthcare services for the public.
This humanitarian assistance was carried out promptly to improve the comfort and care of patients admitted to the hospital’s maternity ward as well as the male and female wards. The event was graced by the Divisional Secretary of Valikamam West as the Chief Guest. The project was successfully implemented with the generous financial contribution of NCPF. We extend our heartfelt gratitude and sincere appreciation to the members of NCPF for their valuable support.
மனிதநேயப்பணி...
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கம் மற்றும் வைத்திய அதிகாரி ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக 24மணி நேர சேவையினை பொது மக்களுக்கு வழங்கும் நோக்குடன் 177, 500.00 பெறேமதியான 25 Mattress (மெத்தைகள்) கடந்த 26.06.2026ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வைத்தியசாலையின் மகப்பேறு விடுதி மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகளில் தங்கி சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக குறித்த மனிதநேயப்பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். குறித்த செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை NCPF அமைப்பினர் வழங்கி வைத்தனர். அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



Providing Tailoring machine
உலக மகளிர் தினம் - 2026
"Give To Gain"
பெண்களுக்கு பரஸ்பர ஆதரவினைக் கொடுக்க வலியுறுத்துகின்றது.
இதனை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் கரைச்சி பிரதேச செயலாளர் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் KN/08 பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வரும் திருமதி சுரேஷ் தினமணி என்பவருக்கு பாரி அறக்கட்டளை
"கல்விக்கான பெண்கள் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் " Zoje புதிய தையல் இயந்திரம் ஒன்றினை வழங்கி வைத்துள்ளது.
இந் நிகழ்வில் எமது அமையத்தின் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அவர்களும் கரைச்சி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.ராஜ்விநோத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு 150,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கிய செ.சசிஜெனனி அவர்களுக்கும் இணைந்து பணியாற்றிய அனைத்து கல்விக்கான சமூகப்பணியாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Internation Women's Day - 2026
We would like to emphasise the importance of mutual support among women.
With the aim of putting this into practice, based on the recommendation of the Karachchi Divisional Secretary, the Paari Foundation has provided a new Zoje sewing machine under the “Women Empowerment for Education Programme” to Mrs. Suresh Dinamani, a resident of the KN/08 Bharathipuram Grama Niladhari Division.
At this event, the founder of our organisation, Mrs. Sasivathana Vimalaranjithan, and the Deputy Planning Director of the Karachchi Divisional Secretariat, Mr. Rajvinoth, were also present and graced the occasion.
I would like to express my heartfelt gratitude to Mrs S. Sasijenani for her generous financial contribution of Rs. 150,000.00, which made the successful implementation of this project possible, as well as to all the community workers involved in education who collaborated in this effort.




