Providing educational facilities
Photocopier machine donation
பாரியின் வீச்சு...
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப் பணி அமையமானது மூளாய் அ.மி.த.க பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு மூன்று இலட்ச்சத்து ஜம்பத்து இரண்டாயிரத்து எழுநூறு ( 352 700.00) ரூபாய் பெறுமதியான புதிய நிழற் பிரதி இயந்திரம் ஒன்றினைக் கடந்த 2025.02.25ம் திகதி வழங்கி வைத்தது.
குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உயரிய நிதிப் பங்களிப்பினை நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திருமதி ஜெகநாதன் சபாநாயகி அவர்கள் வழங்கி வைத்திருந்தார். அவருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
The Paari Foundation Educational Social Work Foundation donated a new photocopy machine worth Rs. 352,700 on February 25, 2025, to support the education of students at Moolai A.M.T.K. School.
This donation was made possible by the generous financial contribution of Mrs. Jagannathan Sabanayaki, who lives in the Netherlands. We extend our heartfelt gratitude to her for her support, on behalf of our foundation.
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() |
Jump rope and netball equipment
பாரியின் வீச்சு...
மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனைகள் நிகழ்த்திட ஓர் ஆரம்பமாய் பாரி!.
மு/கரிப்பட்டமுறிப்பு அ.த.க பாடசாலை அதிபர் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் வலைப்பந்தாட்ட கம்பங்கள் இரண்டு உயரம் பாய்தல் கம்பங்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் கடந்த 2025.03.08ம் திகதி உலக மகளிர் தினத்தன்று பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு 50,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திரு. திருமதி ஜெகநாதன் சபாநாயகி குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். அவர்களுக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Paari is committed to helping students achieve excellence at the national level. In line with this vision, and at the request of the Principal of M/Karipattamurippu A.D.K. School and the Director of Education of the Thunukkai Zone, sports equipment—including netball poles and two high jump poles—was presented to the students to enhance their co-curricular activities. The event took place on March 8, 2025, during International Women's Day, under the chairmanship of the school’s Vice Principal.
This initiative was made possible by a generous financial contribution of Rs. 50,000.00 from the family of Mr. and Mrs. Jaganathan Sabanayaki, who reside in the Netherlands. On behalf of our organization, I extend our heartfelt gratitude to them for their significant support in making this project a success.
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() |
New School Uniform distribution
பாரியின் வீச்சு..
முன்பிள்ளைப் பருவ மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பாரி!..
துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக யோகபுரம் மூவேந்தர் முன்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2025.03.08ம் திகதி உலக மகளிர் தினத்தன்று நடைபெற்றது.
குறித்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு நோர்வே தேசத்தில் வசித்து வரும் தேவியம்மா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Support for the Educational Development of Preschool Students
In response to the request of the Director of Education of the Thunukkai Zone, a special event was held on March 8, 2025, International Women’s Day, to provide new uniforms to the students of Yogapuram Moovendhar Preschool.
This initiative was made possible through the generous financial contribution of one lakh rupees from Deviyamma, a kind-hearted supporter residing in Norway. On behalf of our organization, I would like to express our sincere gratitude to her for her invaluable support in making this project a success.
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() |
Water Purification System
நீர் இன்றியமையாது உலகு.
புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் அ.த.க. பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுத்தமான குடிநீரினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் அமரர் திருமதி இரவிந்திரன் ஜெயரஞ்சனா (நெதர்லாந்து) அவர்களது ஞாபகார்த்தமாக எமது அமையத்தின் சிரேஷ்ர ஆலோசகர் திரு சின்னத்தம்பி இரவிந்திரன் அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் (100,000) உயரிய நிதிப் பங்களிப்புடன் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
Water is essential for the world
In response to the request from the Principal and students of Puthukudiyiruppu Mannakandal A.D.K. School, a water purification system has been installed to provide clean drinking water. This initiative was made possible through a generous financial contribution of one hundred thousand rupees (100,000) from our organization's Senior Advisor, Mr. Chinnathambi Iravindran, in memory of the late Mrs. Ravindran Jayaranjana from the Netherlands.
![]() | ![]() | ![]() |
---|---|---|
![]() | ![]() |