



Drinking water scheme
Moovendar Pre-school
Based on the request of Thunukai Zonal Education Worker, on 24-08-2023 we conducted an assessment work to set up a "Drinking Water Scheme" for Moovendar Pre-school located in the middle of Mallavi Yogapuram. As per the project plan we are going to carry out the following:
* Building a new well due to lack of well facility.
* Using water from well to a fill a water tank.
* Providing drinking water pipe facilities for the school kids
In order to quickly implement the project Mr & Mrs Shanmuganathan Vijayalakshmi residing in the Netherlands has donated Rs 379,100.00 with the aim to provide good health and clean drinking water for students. We express our heartfelt thanks to Mr & Mrs Shanmuganathan Vijayalakshmii on behalf of our foundation.
துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களது கோரிக்கைக்கமைவாக மல்லாவி யோகபுரம் மத்தியில் அமைந்திருக்கும் மூவேந்தர் முன்பள்ளிக்கு "குடிநீர் திட்டம்" ஒன்றினை அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் கடந்த வாரம் மதிப்பீட்டு பணியினை மேற்கொண்டிருந்தோம். இதனடிப்படையில் பின்வரும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
* கிணற்று வசதி இன்மையால் புதிய கிணறு ஒன்றினை அமைத்துக் கொள்ளுதல்.
* 140 அடி தொலைவில் அமைக்கப்படும் கிணற்றிலிருந்து நீர்த்தாங்கிக்கு நீரினைக் கொண்டு வருதல்.
* முன்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப குடிநீர்க் குழாய் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
இவற்றை மாணவச் செல்வங்களின் ஆரோக்கியம் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் குறித்த கருத்திட்டத்தினை விரைந்து நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டு மூன்று இலட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்து நூறு ரூபா ( 379,100.00) நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ள நெதர்லாந்து தேசத்தில் வசித்து வரும் திரு.திருமதி. சண்முகநாதன் விஐயலட்சுமி தம்பதியினருக்கு எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Opening Library at Chinnamadu
Vinmeen Children's Club
On 12.03.2022 we opened a library for the development of the regional children's education, as requested by Urgavaturai Regional Secretary and Child Rights Development Officer and Chinnamadu villagers. This has been setup with the support of Mr. and Mrs. Ravindran's 40,000 rupees funding, the first phase of books worth Rs 25,000 was donated on this day.
எமது பாரி அறக் கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்திடம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர், சின்னமடு கிராம மக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக அப்பிரதேச சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக "விண் மீன் சிறுவர் கழகத்தில் " நூல் நிலையம் ஒன்று 12.03.2022 இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து தேசத்தில் வாழ்ந்து வரும் திரு.திருமதி ரவீந்திரன் ஜெயரஞ்சனா அவர்களின் 40,000 ரூபாய் நிதிப்பங்களிப்புடன் முதல் கட்டமாக 25,000ரூபாய் பெறுமதியான நூல்களை உள்ளடக்கிய நிலையமாக இன்று உதயமாகியுள்ளது. நிகழ்வினை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து நிகழ்த்திய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Opening a library at Mullivaikal East
American Tamil Mixed School
On the request of Mullaitheevu Education Zone's Deputy Commissioner Mr. U. Sureshkumar, Paari Foundation opened a library at Mullivaikal East 'American Tamil Mixed School' on 17.12.2022. The library was opened in memory of our founder Late Mr. Nadarajah Vimalaranjithan. I would like to convey my thanks to Teacher Mr Madhusan who is a social worker for education and V. Dayalan, Development Officer who worked on this event.
முல்லைத்தீவுக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.உ.சுரேஷ்குமார் அவர்களது கோரிக்கைக்கமைவாக எமது பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுனர் அமரர் நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் ஞாபகார்த்த "நூலகப் பெட்டகம்" 17.12.2022 நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் என்னோடு இணைந்து பணியாற்றிய கல்விக்கான சமூகப்பணியாள்களான ஆசிரியர் திரு.வ.தயாளன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ம.மதுசன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Opening a Library Mullaitheevu
Arumugathan School
On17.12.2022, the request of Mullaitheevu Education Zone's Deputy Commissioner Mr. U. Sureshkumar, Paari Foundation opened a second library at Mullaitheevu Arumugathan School. Our founder Mrs. Sasivathana Vimalaranjithan who donated Rs 136,000 to set up a library in memory of our founder Late Mr. Nadarajah Vimalaranjithan. I would like to convey my thanks to Teacher Mr. Madhusan who is a social worker for education and V. Thayalan, Development Officer who worked on this event.
17.12.2022, நிறுவுநர் திருமதி.விமலரஞ்சிதன் சசிவதனா அவர்களது 136,000 ரூபா நிதிப்பங்களிப்புடன் இரண்டு நூலகப் பெட்டகங்கள் திறப்பு. முல்லைத்தீவுக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.உ.சுரேஷ்குமார் அவர்களது கோரிக்கைக்கமைவாக எமது பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் நிறுவுனர் அமரர் நடராசா விமலரஞ்சிதன் அவர்களின் ஞாபகார்த்த இரண்டாவது "நூலகப் பெட்டகம்" ஆறுமுகத்தான் குளம் பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் என்னோடு இணைந்து பணியாற்றிய கல்விக்கான சமூகப்பணியாள்களான ஆசிரியர் திரு.வ.தயாளன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ம.மதுசன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Opening a library at
Mullivaikal West -Tamil Mixed School
On 07.11.2022 the request of Zonal Education officer, Mullaitheevu a library has been set up in Mullivaikal west Tamil Kalavan Padasali in memory of Late Mrs. Ravindran Jayaranjana, with high funding of one lakh (100,000) rupees by her family members. We express our thanks to all those who participated in the event and made it special. Especially the Development Officer of Ya/Manipay Hindu College Mathusan who gave full cooperation to successfully implement the concept .
07.11.2022, பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் அமரர் திருமதி ரவீந்திரன் ஜெயரஞ்சனா அவர்களது ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் ஒரு இலட்சம் (100,000)ரூபா உயரிய நிதிப்பங்களிப்புடன் முல்லைத்தீவு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் மேற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு " நூலகப் பெட்டகம்" அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த கருத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய யா/ மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ம.மதுசன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.